Monday 15 April 2024

தொ.பரமசிவன் நேர்காணல்கள்

 


*தாய்மாமன்

*இறந்தவர்களுக்கான மரியாதை
*பொது இடங்களில் பெண்களுக்கான . மரியாதை
*பெரியாரின் மொழி சீர்திருத்தம்
*குலதெய்வம்
*கால்டுவெல்
*அரசன் சாதி கெட்டவன்
*திராவிடம் ஒரு பண்பாட்டு அடையாளம்
*மொழி கல்வி வட்டாரம் சார்ந்து இருக்கவேண்டும்
*ஸ்மார்த்த பிராம்னர்கள் மட்டுமே இந்துக்கள்.

சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

 


பிரையன் டிரேசி.



• உங்களது லட்சியங்களை தெளிவாக தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
• நீங்கள் எதை பற்றி சிந்திக்கிறார்களோ அதுவாகவே நீங்கள் மாறுகிரீர்கள்.
• நீங்கள் போற்றும் மனிதர்களோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
• உங்களுடை சாத்தியபாடுக்கு எல்லை உண்டு என்பதை நீங்கள் மறுத்து விடுங்கள்.
• எல்லோரையும் மன்னித்து விடுங்கள், தவறென பட்டால் மன்னிப்பு கேளுங்கள், இவற்றின் மூலம் உங்களை நீங்களே விடுதலை செய்து கொள்ளுங்கள்.
• அடுத்த வருடத்திற்கான உங்களுக்கான கனவு பட்டியலை தயார் செய்து, அதை அடைவதற்கான வழியையும் எழுதி வையுங்கள், உங்களுடைய திட்டத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
• உங்களால் சிறப்பாக செய்ய முடிந்த வேலையை இன்னும் மேம்படுத்துங்கள்
• குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலை செய்யும் பழக்கத்தை வளர்துகொள்ளுங்கள் .
• எல்லோரையும் விட கொஞ்சம் அதிகமாக வேலை செய்யுங்கள்.
• உங்களது வேலையை செய்ய விடாமல் குறுக்கிடும் எவரையும் தவிர்த்து விடுங்கள்.
• பொருளாதார ரீதியாக தர்சார்பு நிலையில் இருப்பது என்று இன்றே முடிவு செய்யுங்கள்.
• நீங்கள் இருந்து வருகின்ற அல்லது இருக்க போகின்ற நிலைமைக்கு 100 சதவீதம் நீங்கள் தான் பொறுப்பு என்று முடிவு செய்யுங்கள்.
• நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றை செய்வதிலிருந்து பின்னடைவு செய்கின்ற பயத்தையும், சந்தேகத்தையும் இனம் காணுங்கள் அதில் வெற்றி பெற்றதாக கற்பனை செயுங்கள்.
• நீங்கள் எப்படிபட்ட மனிதராக இருக்க விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட மனிதனாக உங்களை தயார் செய்ய உதவும் மனிதர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
• உங்க துறை சம்மந்தப்பட்ட புத்தகங்களை படிக்க ஒவ்வொரு நாளும் 30-60 நிமிடங்களை முதலீடு செய்யுங்கள்.
• நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் வெற்றியாளர் அருகில் இருங்கள்.
• உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைகளையும் திட்டமிட்ட வகையில் அணுகவேண்டும்.
•ஒவ்வொரு பிரச்சனையிலும் சிரமத்திலும் ஏதேனும் நனமை உள்ளதா என்று கவனியுங்கள். இந்த உலகம் உங்களை வெற்றியடையச் செய்ய சதி செய்து கொண்டிருக்கிறது என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*நீங்க எப்படி வாழ விரும்புகிறீர்களோ அப்படி வாழ்வதாக கற்பனை செய்து பாருங்கள்.
*எது நிகழ்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்குகளை பற்றி சிந்தித்து, அவற்றை அடைவதற்கு என்ன செய்யவேண்டும் சிந்தியுங்கள். சுறுசுறுப்பாக இருங்கள்.
• உங்க வணிகத்தின் போக்குகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்றுள்ள வழியிலேயே விஷயங்கள் நடந்து கொண்டிருந்தால், நீங்கள் எந்த விதமான முடிவுகளை அல்லது மாற்றங்களை நிகழ்த்த வேண்டிவரும்?
• சமரசம் செய்து கொள்ளாமல் உங்களுடனும்,மற்றவர்கள் உடனும் உண்மையாக வாழுங்கள்.
• மக்கள் மாறுவது இல்லை என்று உணருங்கள் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

கதைகளின் கதை

 


சு.வெங்கடேசன்


1️⃣ வளரி
*வாள் வளைந்து வளரி ஆனது
*ஆஸ்திரேலியா
*பூமராங்
*சிவகங்கை
*பெரிய மருது - ஜேம்ஸ் வெல்ஸ்
*ஆய்த தடை சட்டம் 1801
*மதுரை கோவில்குளம்
*பட்டசாமி

2️⃣ போக்கிரி
• கைக்குட்டை, ஈய குண்டு
*1830 போக்கிரி ஒலிப்பு சட்டம்

3️⃣பாவ மூட்டை எண்:188
*காசி - ராமேஸ்வரம்
*1820 அக்டோபர்
*இரண்டாம் சர்போஜி
*1822 மே -9 ராமேஸ்வரம்
*சரஸ்வதி மஹால் மூட்டை எண் 188

4️⃣புகையிலை விடு தூது
*சீனிசர்கரை புலவர்(முருக கடவுள்)
*1492 புகையிலை/அமெரிக்கா/கொலம்பஸ்/கியூபா
*1615 முகலாயர்/ஜஹாங்கீர்
*அயர்லாந்து - உருளைக்கிழங்கு

5️⃣ வவுச்சரின் வரலாறு
*1840 மதுரை கலெக்டர் பிளாக் பெர்ன்
*மதுரை கோட்டை
*கோட்டை சுவற்றை இடித்து அகளியை மூடுபவர்களுக்கு அந்த இடம் சொந்தம்.
*துனையடிகால் மாடு துர பயணத்துக்கு உதவாது.
*1850ல் ரூ.1 பத்து கிலோ அரிசி
*மதுரை டூ சென்னை மாட்டுவண்டி பயணம் ரூ.206.32(ரூ.66,000)

6️⃣ கீழடி
*2400 ஆண்டு

7️⃣ நல்லதங்காள் பென்னிகுவிக்
*தாது வருடம்
*19ம் நூற்றாண்டு 27 முறை பஞ்சம்
-1800-1825(10,00,000)
-1826-1850(4,00,000)
- 1851-1875(50,00,000)
- 1876-1900(1,50,00,000)
*காலனிய அரசு குடியேற்ற sattam-1877
*அன்னதானம் (37 வகை தானம்)
சாதுக்கள்,எழைகள்,குருடர்கள்,முடவர்கள்,திக்கற்ற விருந்தர்கள்,சக்தியற்ற பலகீனர்கள் , திசைதப்பி வந்த செல்வார்கள்,செய்ய குற்றத்திற்கு சிறையில் இருப்பார்கள்.
*நல்லதங்காள்
*ஜான் பென்னிகுவிக்
*பெரியார் அணை.
8️⃣ அடுப்பங்கரை ஆவணம்
*ராமச்சந்திர ராயர்
*இந்து பாகசாஸ்திரம்
*400 பக்கம்
*1891ம் ஆண்டு
9️⃣ மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ
*மாயக்காள்,
*ஜார்ஜ் ஜோசப் வழக்கறிஞர்
*1920
🔟 குழு ஊக்குறி
*பரிபாஷ
*சங்கேத மொழி
1️⃣1️⃣ குற்றமும் தண்டனையும்
*கவ்டலியியம்,சுக்கிர நீதி
*முகலாய நீதி
*1861 ஆங்கிலேய சட்டம்
* எழுவம்பட்டி எட்டு சட்டம்

ரயிலேறிய கிராமம்


எஸ்.ராமகிருஷ்ணன்

படிக்கவேண்டிய உலக புத்தகங்கள் எஸ்.ரா அவர்களின் பரிந்துரை. 

1. ரயிலேறிய கிராமம்( THIRD CLASS TICKET - Heather Wood) ஶ்ரீமதி சென்.

2. வாரிசூடினும் பார்பவரில்லை
(பயணி - ஶ்ரீதரன் (இந்திய வெளியுறவு துறை அதிகாரி)
Shi Jing - Book of Ode.

3.முல்லை புரத்து மனிதர்கள்.
White man falling - Mike stock

4. இரவிற்கு எல்லாம் தெரியும்
(The Diary of Anne Frank)

5. உயிர் தப்பிய வாங்போ

6. Grandfather -tam prawn

7. குட்டி இளவரசன் பூக்களோடு போடுகிறான்
Antoine de Saint exupery பிரஞ்சு எழு த்தாளர்(விமான ஓட்டி)

8.அஸீஸ் பே சம்பவம் (கவிங்கர் சுகுமாரன்)

9. தேவமலர்(கீயிங்கோ வனதிருடன்)
சல்மா லாகீலேவின்.

பிரசாதம் (சிறுகதை தொகுப்பு)


 சுந்தர ராமசாமி.


1.பிரசாதம்
*எழுபத்தி மூன்று நற்பத்தியேழு
*கண்ணம்மா.
*நவநீத கிர்ஷ்ணன் கோவில் ஐயர்.

எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான்
யாரோ ஒருவரை மகிழ்விப்பதற்காக...
யாரோ ஒருவரை துன்புறுத்த துணிந்து விடுகிறார்கள்.

''நாளை விடியக் கருக்கலில் எழுந்திரிக்க வேண்டும்.
சூடு தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும்.
பட்டு சட்டை போட்டு, கலர் நூல் வைத்துப் பின்ன வேண்டும்.
அந்த பின்னலில் ஒரே ஒரு ரோஜா - ஒன்றே ஒன்று - அதற்கு தனி அழகு.
நாம் இருவரும் குழந்தையை கோவிலுக்கு எடுத்துச் செல்கிறதுபொழுது
தெருவில் சாணி தெளிகும் பெண்கள், கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலைதூக்கி தலைதூக்கி பார்க்க வேண்டும்.
அவர்கள் தலைதூக்கி பார்ப்பதை நான் பார்க்கவேண்டும்.நான் பார்த்து உங்களை பார்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பார்ப்பதை பார்க்க வேண்டும். பார்த்து விட்டு என்னை பார்க்க வேண்டும்''


அச்சச்சோ... மணிதற்களுக்குதான் எத்தனை ஆசை.
எத்தனை விதமான ஆசை.
நமக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழத்துணியும் போதுதான் குற்றங்கள் முளைக்கின்றன.

2.சன்னல்.

கண்கள் மட்டுமே உணவர்வோடு இருக்கும் ஒரு நோயாளியின் உலகம் எப்படியாக இருக்க கூடும்
என நம்மால் உணர முடியும்.

நம்மோடு இருக்கும் வயதானவர்கள் நோயாளிகளை எப்படி நடத்த வேண்டும் என புரிந்து கொள்ள முடியும்.

3.லவ்வு.

அடுத்த வீட்டு சங்கதிகளை எச்சில் வழிய பேசுவதில் எத்தனை சுகம் எத்தனை ஆறுதல் நமக்கு...

கோலப்பன் மாதிரி சில கேரக்டர்கள் தான்
வாழ்க்கையை மடை மாற்றி விடுக்கிறார்கள்.

லவ்வு என்பது ஒரு நோய். அது பரவுகிறது அது எல்லோரையும் தாக்குகிறது, அது எனது எருமையையும் விடவில்லை என்பது போல அந்த பெருசுகள் பேசுவது ... 😅

4.ஸ்டாம்பு ஆல்பம்

குழந்தைகள் அன்பானவர்கள் கள்ளம் இல்லாதவர்கள்.

5.ஒன்றும் புரியவில்லை
அக்கா திருமணம் ஆகி புகுந்தாவீட்டுக்கு போகிற போது அழுகிறாள்.
தம்பி மாட்டுவண்டி பயணத்தை எண்ணி மகிழ்கிறான்.
புகுந்த வீட்டில் அக்கா வேலை செய்வதை பார்த்து
கவலை அடைகிறான்.
அவள் பிரிவை எண்ணி அழவில்லை, இந்த வேலையை எண்ணி அழுதிருப்பாலோ என எண்ணுகிறான்.
திரும்பி பிறந்த வீட்டுக்கு வரும்போதும் அழுகிறாள்
ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

5.வாழ்வும் வசந்தமும்.
எல்லா ஆண்களுக்குமான பதின் பருவத்தின்
சுகமான நினைவுகள்.

அவளுக்கு ஒரு பெயர் வைத்து, அவள் உடுத்தும் அடைகளை
முன்கூட்டியே யூகிக்கும் அளவுக்கு
ரசித்து பார்பதெல்லாம். ஒரு காலம்...

அவள் நெருங்கி வந்து, உடன் பணி புரியும் போது
அந்த ஈர்ப்பு குறைந்து விடுகிறது.

நாம் விரும்பும் எதுவும் நம் கைக்கு கடைசிவரை கிடைக்க கூடாது என சில சமயம் தோன்றும்.
ஏனென்றால் அதன் நினைவுகள் அத்தனை இதமானது.

வயது போக போக நினைவுகளை தவிர வேறென்ன மிச்சமிருக்க போகிறது இந்த வாழ்வில்.

"அவள் நடந்து செல்கின்ற அசைவில் குஞ்சம் ஒரு அரை வளையம் போட்டு, துள்ளித் துள்ளி தொட்டுகொண்டிருந்தது.
சின்னஞ் சிறிய யானை குட்டியொன்று தனது துதிக்கையை ஆட்டி அசத்து விளையாடுவது மாதிரி"

"நாகராஜன் வீட்டு திண்ணை ஏணிப்படியில் உட்கார்து கொண்டிருந்தால் ராஜம் தண்ணீர் பிடிக்க வருவாள். ஞாயிறு மட்டும் ஒருமணி நேரம் இடைவிட்டு நாள் பூராவும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருப்பாள்"

"ராஜாமணி தேடரான் ஸார், அவனுக்கு இன்னும் அகப்படவில்லை"

6. கிடாரி
ஆண்பிள்ளை மோகம்.
அப்படி சாதரணமாக சொல்லிவிட முடியாது.
1959 வந்த இந்த கதைக்கு பினால் எந்தனை பெண்களின் வேதனை இருக்கும் என்பதை உணர முடிகிறது.

7.சீதைமார்க் சீகக்காய் தூள்.
படைப்பாளியின் வறுமை
தயாரிப்பாளரின் வன்மம்.

"இராவணன் கூடப்பிறந்த அண்ணமில்லா போலிருக்குது -
இல்லே, அவன்தான். சீதை இல்லாத உலகத்துல திரும்பவும் பிறந்து சீகக்கய் யாவாரம் பண்ணிகிட்டு இருக்காரு அவ்வளவுதான்"

மெய் + பொய் = மெய்
பொய்யான கதைகளின் வழியாக
உண்மையை உணர்த்தும் எழுத்தாளன்.

Sunday 7 April 2024

உயிரத் தேன்

 - 1966 ஆனந்தவிகடன்


- ஆருகட்டி
- நரசிம்மன் - லட்சுமி
- பூவராகன் - ரங்கநாயகி
- வெங்கடேச பிள்ளை - செங்கம்மா
- ஆமருவி, அனுசியா, பழனி

அன்பாலும் அழகாலும் அருகட்டியையே
கட்டி ஆளும். குல தெய்வம் செங்கம்மா!.

செங்கம்மா கணேச பிள்ளைக்கு இரண்டாவது மனைவியாக, இளம் மனைவியாக இருப்பது...
ஊர் ஆண்களின் மனதில் எச்சில் ஊர வைக்கிறது.

அவர்கள் மீது குறையில்லை அவள் அப்படி ஓர் அழகு.

அதேதான் பட்டணத்தில் இருந்து ஊர் திரும்பிய பூவராகனுக்கும்.
அவள் அவன் வீட்டிலேயே வேலைக்கு அமர்த்திய பிறகு, இன்னும் அழுத்தம் அதிகமாகிறது, ஒரே ஆறுதல் ஊர் ஆண்களை போல அவளை பார்க்க அங்கும் இங்கும் திரிய வேண்டியதில்லை.

போக போக அவளின் அன்பும், பரிவும்,
அவள் மீதிருந்த காமத்தை துடைதெரிகிறது.

பழனியின் மிரட்டலால் ஊர் கோவில் புனரமைப்பில் இருந்து ஊரார் விலகிய போதும், செங்கம்மா கொடுத்த தைரியதால் பணியை தொடர்கிறான் பூவராகன்.

தொடர்ந்து ஊர் தலைமை ஏற்கிராள்,
ஊரை ஒன்று சேர்க்கிறாள், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துகிறாள். 
எல்லாம் அவள் அன்பால் சாத்தியமானது.
*****************************************
கணேசபிள்ளைக்கும் செங்கம்மாவுக்கும் இருக்கும் அன்பு , நம்பிக்கை, காதல் அது வெளிப்படும் விதம் இனிமையானது.
பழனியின் கடிதம் பார்த்த பின்பு
கணேசபிள்ளை சொன்னது எதிர்பாராதது.

பழனிக்கும் செங்கம்மாவுக்கும் இருந்த காதல் முட்டையின் ஓட்டை உடைக்க முடியாத குஞ்சு... உள்ளேயே மரணிப்பது போல கொடுமையானது.

பூவராகனுக்கும் செங்கம்மாவுக்கும்‌ மான காதல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு அன்போடும் அளவோடும் நின்ற அழகான காதல்.

நரசிம்மன் மனைவி லட்சுமி பூவராகனுக்கும் செங்கம்மாவுக்கும்‌ மான "கிசு கிசு" க்களை
நரசிம்மனுக்குனு வேறொரு கோணத்தில் விளக்கும் விதம் அருமை.


அனுசியா செங்கம்மாவின் மேன்பட்ட அல்லது மேன்படாத இன்னொரு வடிவம்.
அவள் அன்புக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.