சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

 


பிரையன் டிரேசி.



• உங்களது லட்சியங்களை தெளிவாக தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
• நீங்கள் எதை பற்றி சிந்திக்கிறார்களோ அதுவாகவே நீங்கள் மாறுகிரீர்கள்.
• நீங்கள் போற்றும் மனிதர்களோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
• உங்களுடை சாத்தியபாடுக்கு எல்லை உண்டு என்பதை நீங்கள் மறுத்து விடுங்கள்.
• எல்லோரையும் மன்னித்து விடுங்கள், தவறென பட்டால் மன்னிப்பு கேளுங்கள், இவற்றின் மூலம் உங்களை நீங்களே விடுதலை செய்து கொள்ளுங்கள்.
• அடுத்த வருடத்திற்கான உங்களுக்கான கனவு பட்டியலை தயார் செய்து, அதை அடைவதற்கான வழியையும் எழுதி வையுங்கள், உங்களுடைய திட்டத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
• உங்களால் சிறப்பாக செய்ய முடிந்த வேலையை இன்னும் மேம்படுத்துங்கள்
• குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலை செய்யும் பழக்கத்தை வளர்துகொள்ளுங்கள் .
• எல்லோரையும் விட கொஞ்சம் அதிகமாக வேலை செய்யுங்கள்.
• உங்களது வேலையை செய்ய விடாமல் குறுக்கிடும் எவரையும் தவிர்த்து விடுங்கள்.
• பொருளாதார ரீதியாக தர்சார்பு நிலையில் இருப்பது என்று இன்றே முடிவு செய்யுங்கள்.
• நீங்கள் இருந்து வருகின்ற அல்லது இருக்க போகின்ற நிலைமைக்கு 100 சதவீதம் நீங்கள் தான் பொறுப்பு என்று முடிவு செய்யுங்கள்.
• நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றை செய்வதிலிருந்து பின்னடைவு செய்கின்ற பயத்தையும், சந்தேகத்தையும் இனம் காணுங்கள் அதில் வெற்றி பெற்றதாக கற்பனை செயுங்கள்.
• நீங்கள் எப்படிபட்ட மனிதராக இருக்க விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட மனிதனாக உங்களை தயார் செய்ய உதவும் மனிதர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
• உங்க துறை சம்மந்தப்பட்ட புத்தகங்களை படிக்க ஒவ்வொரு நாளும் 30-60 நிமிடங்களை முதலீடு செய்யுங்கள்.
• நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் வெற்றியாளர் அருகில் இருங்கள்.
• உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைகளையும் திட்டமிட்ட வகையில் அணுகவேண்டும்.
•ஒவ்வொரு பிரச்சனையிலும் சிரமத்திலும் ஏதேனும் நனமை உள்ளதா என்று கவனியுங்கள். இந்த உலகம் உங்களை வெற்றியடையச் செய்ய சதி செய்து கொண்டிருக்கிறது என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*நீங்க எப்படி வாழ விரும்புகிறீர்களோ அப்படி வாழ்வதாக கற்பனை செய்து பாருங்கள்.
*எது நிகழ்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்குகளை பற்றி சிந்தித்து, அவற்றை அடைவதற்கு என்ன செய்யவேண்டும் சிந்தியுங்கள். சுறுசுறுப்பாக இருங்கள்.
• உங்க வணிகத்தின் போக்குகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்றுள்ள வழியிலேயே விஷயங்கள் நடந்து கொண்டிருந்தால், நீங்கள் எந்த விதமான முடிவுகளை அல்லது மாற்றங்களை நிகழ்த்த வேண்டிவரும்?
• சமரசம் செய்து கொள்ளாமல் உங்களுடனும்,மற்றவர்கள் உடனும் உண்மையாக வாழுங்கள்.
• மக்கள் மாறுவது இல்லை என்று உணருங்கள் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

செல்வக்குமார்

பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊர்,தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பிறந்த ஊர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிழைக்கும் ஊர். தொழில் : கைபேசி பழுது நீக்குதல்.

Post a Comment

Previous Post Next Post

பணம்சார் உளவியல் The Psychology of Money (Tamil)