பிரசாதம் (சிறுகதை தொகுப்பு)


 சுந்தர ராமசாமி.


1.பிரசாதம்
*எழுபத்தி மூன்று நற்பத்தியேழு
*கண்ணம்மா.
*நவநீத கிர்ஷ்ணன் கோவில் ஐயர்.

எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான்
யாரோ ஒருவரை மகிழ்விப்பதற்காக...
யாரோ ஒருவரை துன்புறுத்த துணிந்து விடுகிறார்கள்.

''நாளை விடியக் கருக்கலில் எழுந்திரிக்க வேண்டும்.
சூடு தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும்.
பட்டு சட்டை போட்டு, கலர் நூல் வைத்துப் பின்ன வேண்டும்.
அந்த பின்னலில் ஒரே ஒரு ரோஜா - ஒன்றே ஒன்று - அதற்கு தனி அழகு.
நாம் இருவரும் குழந்தையை கோவிலுக்கு எடுத்துச் செல்கிறதுபொழுது
தெருவில் சாணி தெளிகும் பெண்கள், கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலைதூக்கி தலைதூக்கி பார்க்க வேண்டும்.
அவர்கள் தலைதூக்கி பார்ப்பதை நான் பார்க்கவேண்டும்.நான் பார்த்து உங்களை பார்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பார்ப்பதை பார்க்க வேண்டும். பார்த்து விட்டு என்னை பார்க்க வேண்டும்''


அச்சச்சோ... மணிதற்களுக்குதான் எத்தனை ஆசை.
எத்தனை விதமான ஆசை.
நமக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழத்துணியும் போதுதான் குற்றங்கள் முளைக்கின்றன.

2.சன்னல்.

கண்கள் மட்டுமே உணவர்வோடு இருக்கும் ஒரு நோயாளியின் உலகம் எப்படியாக இருக்க கூடும்
என நம்மால் உணர முடியும்.

நம்மோடு இருக்கும் வயதானவர்கள் நோயாளிகளை எப்படி நடத்த வேண்டும் என புரிந்து கொள்ள முடியும்.

3.லவ்வு.

அடுத்த வீட்டு சங்கதிகளை எச்சில் வழிய பேசுவதில் எத்தனை சுகம் எத்தனை ஆறுதல் நமக்கு...

கோலப்பன் மாதிரி சில கேரக்டர்கள் தான்
வாழ்க்கையை மடை மாற்றி விடுக்கிறார்கள்.

லவ்வு என்பது ஒரு நோய். அது பரவுகிறது அது எல்லோரையும் தாக்குகிறது, அது எனது எருமையையும் விடவில்லை என்பது போல அந்த பெருசுகள் பேசுவது ... 😅

4.ஸ்டாம்பு ஆல்பம்

குழந்தைகள் அன்பானவர்கள் கள்ளம் இல்லாதவர்கள்.

5.ஒன்றும் புரியவில்லை
அக்கா திருமணம் ஆகி புகுந்தாவீட்டுக்கு போகிற போது அழுகிறாள்.
தம்பி மாட்டுவண்டி பயணத்தை எண்ணி மகிழ்கிறான்.
புகுந்த வீட்டில் அக்கா வேலை செய்வதை பார்த்து
கவலை அடைகிறான்.
அவள் பிரிவை எண்ணி அழவில்லை, இந்த வேலையை எண்ணி அழுதிருப்பாலோ என எண்ணுகிறான்.
திரும்பி பிறந்த வீட்டுக்கு வரும்போதும் அழுகிறாள்
ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

5.வாழ்வும் வசந்தமும்.
எல்லா ஆண்களுக்குமான பதின் பருவத்தின்
சுகமான நினைவுகள்.

அவளுக்கு ஒரு பெயர் வைத்து, அவள் உடுத்தும் அடைகளை
முன்கூட்டியே யூகிக்கும் அளவுக்கு
ரசித்து பார்பதெல்லாம். ஒரு காலம்...

அவள் நெருங்கி வந்து, உடன் பணி புரியும் போது
அந்த ஈர்ப்பு குறைந்து விடுகிறது.

நாம் விரும்பும் எதுவும் நம் கைக்கு கடைசிவரை கிடைக்க கூடாது என சில சமயம் தோன்றும்.
ஏனென்றால் அதன் நினைவுகள் அத்தனை இதமானது.

வயது போக போக நினைவுகளை தவிர வேறென்ன மிச்சமிருக்க போகிறது இந்த வாழ்வில்.

"அவள் நடந்து செல்கின்ற அசைவில் குஞ்சம் ஒரு அரை வளையம் போட்டு, துள்ளித் துள்ளி தொட்டுகொண்டிருந்தது.
சின்னஞ் சிறிய யானை குட்டியொன்று தனது துதிக்கையை ஆட்டி அசத்து விளையாடுவது மாதிரி"

"நாகராஜன் வீட்டு திண்ணை ஏணிப்படியில் உட்கார்து கொண்டிருந்தால் ராஜம் தண்ணீர் பிடிக்க வருவாள். ஞாயிறு மட்டும் ஒருமணி நேரம் இடைவிட்டு நாள் பூராவும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருப்பாள்"

"ராஜாமணி தேடரான் ஸார், அவனுக்கு இன்னும் அகப்படவில்லை"

6. கிடாரி
ஆண்பிள்ளை மோகம்.
அப்படி சாதரணமாக சொல்லிவிட முடியாது.
1959 வந்த இந்த கதைக்கு பினால் எந்தனை பெண்களின் வேதனை இருக்கும் என்பதை உணர முடிகிறது.

7.சீதைமார்க் சீகக்காய் தூள்.
படைப்பாளியின் வறுமை
தயாரிப்பாளரின் வன்மம்.

"இராவணன் கூடப்பிறந்த அண்ணமில்லா போலிருக்குது -
இல்லே, அவன்தான். சீதை இல்லாத உலகத்துல திரும்பவும் பிறந்து சீகக்கய் யாவாரம் பண்ணிகிட்டு இருக்காரு அவ்வளவுதான்"

மெய் + பொய் = மெய்
பொய்யான கதைகளின் வழியாக
உண்மையை உணர்த்தும் எழுத்தாளன்.

செல்வக்குமார்

பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊர்,தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பிறந்த ஊர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிழைக்கும் ஊர். தொழில் : கைபேசி பழுது நீக்குதல்.

Post a Comment

Previous Post Next Post

பணம்சார் உளவியல் The Psychology of Money (Tamil)