- 1966 ஆனந்தவிகடன்
- ஆருகட்டி
- நரசிம்மன் - லட்சுமி
- பூவராகன் - ரங்கநாயகி
- வெங்கடேச பிள்ளை - செங்கம்மா
- ஆமருவி, அனுசியா, பழனி
அன்பாலும் அழகாலும் அருகட்டியையே
கட்டி ஆளும். குல தெய்வம் செங்கம்மா!.
செங்கம்மா கணேச பிள்ளைக்கு இரண்டாவது மனைவியாக, இளம் மனைவியாக இருப்பது...
ஊர் ஆண்களின் மனதில் எச்சில் ஊர வைக்கிறது.
அவர்கள் மீது குறையில்லை அவள் அப்படி ஓர் அழகு.
அதேதான் பட்டணத்தில் இருந்து ஊர் திரும்பிய பூவராகனுக்கும்.
அவள் அவன் வீட்டிலேயே வேலைக்கு அமர்த்திய பிறகு, இன்னும் அழுத்தம் அதிகமாகிறது, ஒரே ஆறுதல் ஊர் ஆண்களை போல அவளை பார்க்க அங்கும் இங்கும் திரிய வேண்டியதில்லை.
போக போக அவளின் அன்பும், பரிவும்,
அவள் மீதிருந்த காமத்தை துடைதெரிகிறது.
பழனியின் மிரட்டலால் ஊர் கோவில் புனரமைப்பில் இருந்து ஊரார் விலகிய போதும், செங்கம்மா கொடுத்த தைரியதால் பணியை தொடர்கிறான் பூவராகன்.
தொடர்ந்து ஊர் தலைமை ஏற்கிராள்,
ஊரை ஒன்று சேர்க்கிறாள், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துகிறாள்.
எல்லாம் அவள் அன்பால் சாத்தியமானது.
*****************************************
கணேசபிள்ளைக்கும் செங்கம்மாவுக்கும் இருக்கும் அன்பு , நம்பிக்கை, காதல் அது வெளிப்படும் விதம் இனிமையானது.
பழனியின் கடிதம் பார்த்த பின்பு
கணேசபிள்ளை சொன்னது எதிர்பாராதது.
பழனிக்கும் செங்கம்மாவுக்கும் இருந்த காதல் முட்டையின் ஓட்டை உடைக்க முடியாத குஞ்சு... உள்ளேயே மரணிப்பது போல கொடுமையானது.
பூவராகனுக்கும் செங்கம்மாவுக்கும் மான காதல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு அன்போடும் அளவோடும் நின்ற அழகான காதல்.
நரசிம்மன் மனைவி லட்சுமி பூவராகனுக்கும் செங்கம்மாவுக்கும் மான "கிசு கிசு" க்களை
நரசிம்மனுக்குனு வேறொரு கோணத்தில் விளக்கும் விதம் அருமை.
அனுசியா செங்கம்மாவின் மேன்பட்ட அல்லது மேன்படாத இன்னொரு வடிவம்.
அவள் அன்புக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
Tags:
புத்தகம்
