தினமும் அதிகாலை 4 மணிக்கு எளிதாக எழுந்திருப்பது எப்படி?

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்‌. தூக்க சுழற்சி (sleep cycle)
ஒரு தூக்க சுழற்சி 90 நிமிடங்கள். அதாவது 1 மணி நேரம் 30 நிமிடங்கள். இதில் ஏதாவது ஒரு தூக்க சுழற்சி முடியும் முன் எழுந்தால் தான் நாள் முழுவதும் சோர்வாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக இரவு 11 மணிக்கு தூங்க செல்கிறீர்கள் என்றால். சுழற்சி கணக்கு
12:30, 2:00, 3:30, 5:00 இப்படி இருக்கும். இதில் 4 மணிக்கு எழுந்தால் கடைசி சுழற்சி பாதிக்கப்படும்‌‌. எனவே சோர்வாக இருக்கும்‌.
இரண்டாவது, ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூக்கம் தேவை‌. அதிகபட்சமாக 9 மணி நேரம்‌. 4 மணிக்கு எழ வேண்டும் என்றால் 10 மணிக்கெல்லாம் படுக்கைக்கு சென்று விட்டார் வேண்டும். இப்போது தூக்க சுழற்சி கணக்கிட்டால் (10:00, 11:30, 1:00, 2:30, 4:00) சுழற்சி முழுமை அடைந்து விடுகிறது‌.
இது தவிர வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்
சாப்பிட்ட உடன் உறங்க கூடாது. ‌‌‌‌‌‌‌‌‌‌எனவே முன்பே சாப்பிட வேண்டும். முடித்தால் சூரியன் மறையும் முன் சாப்பிட்டு விடுங்கள். படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் பால் குடித்து விடுங்கள்.
அலாரம்‌. தூரமாக இருக்க வேண்டும்.
அதற்காக நான் செய்தது போல ஹாலில் வைத்து விட்டு படுக்கை அறைக்கு சென்று விடாதீர்கள். படுக்கை அறையிலேயே நீங்கள் எழுந்து சென்று எடுக்க வேண்டிய தூரத்தில் வைக்கவும். சில அலார செயலிகள் வந்துள்ளன. ஒரு கணக்கை செய்தால் தான் நிற்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தை படம் பிடித்தால் தான்‌நிற்கும் என்று பல விதம் உள்ளன. இவை சிலருக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் எனக்கு காலையிலேயே அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதால் பயன்படுத்துவதில்லை
செல்பேசி. உறங்க செல்லும் ஒரு மணி நேரம் முன்பே ஒதுக்கிவிடுங்கள். அப்போதே அலாரம் வைத்து விடுங்கள். இந்த ஒரு மணி நேரம் என்ன செய்யலாம். புத்தகம் படிக்க வேண்டும். நீங்கள் எங்கே உறங்குவீர்களோ அங்கே அமர்ந்து கொண்டு புத்தகம் படியுங்கள். அருமையாக தூக்கம் கண்ணை சொருகும். (பள்ளியில் நடக்குமே… அதே போல் தான்.) அப்போது புத்தகத்தை மூடி விட்டு படுத்து விடுங்கள். ஒரு மணி நேரம் ஆகவில்லையே தூக்க சுழற்சி பாதித்து விடுமே. கொஞ்சம் முன் பின் இருந்தால் பரவாயில்லை.
மதிய நேரத்தில் உறங்குபவரா? முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். தூங்கினேன் ஆக வேண்டும் என்றால் ஒரு டம்ளர் காப்பி குடித்து விட்டு 20 நிமிடம் அலாரம் வைத்து படுங்கள். ஏன்? காபியில் உள்ள caffeine வேலை செய்ய 20 நிமிடம் ஆகும். இந்த 20 நிமிடம் தூங்கி விட்டால் அது தன்‌ வேலையை செவ்வனே செய்து முடிக்கும்.
காலையில் எழுந்த உடன் முகம் கழுவி விடுங்கள். முகம் கழுவினால் தான் தூக்கமே வரும் என்ற வகையறாக்கள் பல் தேய்த்து விடுங்கள்.
எழுந்த உடனே ஔவை ஷண்முகி போல பறந்து பறந்து வேலை செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நாம் எழுந்து விட்டோம் என்று அறிய நம் உடலிற்கு அரைமணி நேரம் பிடிக்கும். அதுவரை தூங்கலாமா என்று கேட்டு விடாதீர்கள். அதுவரை நடந்து கொண்டு இருங்கள் பொறுமையாக.
ந‌ன்றி;) (QUORA)






செல்வக்குமார்

பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊர்,தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பிறந்த ஊர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிழைக்கும் ஊர். தொழில் : கைபேசி பழுது நீக்குதல்.

Post a Comment

Previous Post Next Post

பணம்சார் உளவியல் The Psychology of Money (Tamil)