பணம்சார் உளவியல் The Psychology of Money (Tamil)



Author: Morgan Housel 

எவராலும் , எப்போதும், ஒருக்காலும், கணிக்க இயலாத வகையிலான மிகவும் தெள்ளத்தெளிவான நிகழ்வுகளைத்தான் கொண்டுள்ளது இவ்வுலகம் - ஷெர்லாக் ஹோம்ஸ் 

1.உலகின் பிரமாண்ட நிகழ்வு

ரொனால்ட் ரீடின் வெற்றியும் - ரிச்சர்ட் ஃபஸ்கோனின் தோல்வியும்.

2.எவரும் அறிவிலி அல்லர்

வெவ்வேறு விதமான வருமானத்தை கொண்ட, வெவ்வேறு வகையான கொள்கையுடைய , உலகின் வெவ்வேறு இடங்களில் வசித்த, வெவ்வேறு பொருளாதார சூழலில் வளர்ந்த, வெவ்வேறு விதமான லாபங்களை பெற்ற, வெவ்வேறு அளவிலான அதிர்ஷ்ட பெற்ற பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட , வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த மக்கள், வெவேறு விதமான படிப்பினைகளை பெறுகிறார்கள்.

3. அதிர்ஷ்டமும் இடர்பாடும்.

எதுவுமே அது காணப்படும் அளவிற்கு நல்லதாகவும் இல்லை தீயதாகவும் இல்லை

(கணிப்பொறி - பில்கேட்ஸ்)

4.நிறையாத தேவதை.

இன்றைய உலகில் , போதும் என்ற நிறைவுக்கான எல்லையே இல்லாத நிலைதான் அச்சம் விளைவிக்கும் காரணியாக உள்ளது. இது நம்மிடையே உள்ள மிகப்பெரும் செல்வந்தர்களும் , மிகப்பெரும் ஆளுமையுள்ளவர்களுக்கும் பொருந்தும்.

நாம் எவ்வளவு உணவை சாப்பிட இயலும் என்பதை கண்டுகொள்ள வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி நாம் நோயிரும்வரை உண்பதே ஆகும்.

5. குழப்பமான கூட்டல்.

நீண்ட காலம்.

6.வளமடைதலும் வளமாய் இருத்தலும்.

வளத்தை சேர்ப்பதற்கு உதவுவான, இடர்களை எதிர்கொள்ளுதல், நம்பிக்கையோடு இருத்தல், நம்முடைய முழு முயற்சியையும் பங்கையும் அதற்கான பணியில் அர்பணிதல் ஆக்கினவே ஆகும்.

ஆனால் சேர்த்த வளத்தை பாதுகாத்தல் என்பது, இடர்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் முறையாகும். வளம் எப்படி வந்து சேர்ந்ததோ அதை போன்றே கண நேரத்தில் நம்மைவிட்டு அகலும் என்ற அச்சமும், தன்னடக்கமும் , வளத்தை பாதுகாப்பதற்கு உள்ள குணமாகும். நம்மிடம் சேர்ந்த வளத்தில் ஒரு பங்காவது நமக்கிருந்த அதிர்ஷ்டதால் தான் கிடைத்தது என்ற மனப்பான்மையும், சிக்கனமும், இதற்கான முக்கிய காரணிகள் ஆகும். எனவே கிடைத்த வெற்றியின் அடிப்படையில், அதைபோன்றே எதிர்காலத்திலும் , ஒவ்வொரு முறையும் நடக்கும் என்று நம்புவதும் தவறானதாகும்.

7. பூ விழுந்தால் உனக்கு வெற்றி!

சில முயற்சிகள் வெற்றியை தரும் சில தாரா. இவ்விரண்டு விளைவுகளுக்கும் சரியான காரணம் என்று எதுவும் இல்லை . அடுத்த நிகழ்வுக்கு நகர்ந்த படியே இருங்கள்.

அவனை சுற்றியுள்ளார் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கும் வேளையிலும், எவன் ஒருவன் இயல்பான நிலையில் செயல்படுகிறானோ அவனே சிறந்த போர் வீரன் - நெப்போலியன்.

காத்திருப்பின் இறுதியில் விளைவுகளின் வியப்பு காட்சியளிக்கும்.

தலையல்ல ; இறுதிகட்ட வால் தான் அனைத்தையும் சாத்தியப்படுத்துகிறது.

7.விடுதலை

ஒவ்வொரு நாளும் காலையில் நான் எழுந்தவுடன் "நான் என்ன செய்ய எண்ணுகிறேனோ அதை இன்று செய்வேன்" என்று சொல்லும் திறனே செல்வத்தின் உச்ச மதிப்பு.

ஒரு ஆறுமாத செலவுக்கான தொகை உங்களிடம் இருந்தால், அடுத்த வேலை கிடைக்கும் வரை இந்த கையிருப்பு உங்களுக்கு உதவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக , உங்கள் பணியோய்வு எப்போது என்பதை நீங்கள் தீர்மானிக்கும் அந்த சுதந்திரத்தை பெறுவது.

உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத காலவரையறையின் கீழ் , உங்களுக்கு பிடித்த காரியத்தை செய்வது என்பது உங்களுக்கு பிடிக்காததை செய்வதை போன்றதே.

தரமான நட்பு, தங்களைவிட உயர்த்தவர்களோடு தொடர்பில் இருத்தல், தரமாக செலவழிக்கும் பழக்கம் , குழந்தைகளோடு நேரம் செலவழித்தால்.

9. காட்சிக்கு வராததே வெற்றி.

உங்களிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை காட்டுவதற்காக செய்யப்படும் செலவுகளே, உங்கள் செல்வத்தை எளிதில் இழக்க செய்யும் செயல்கள்.

10. சேமியுங்கள்.

உங்கள் வருவாயில் இருந்து, உங்கள் செலவுகள் போக , விட்டுப்போன அந்த மிகைகளின் மொத்தமே உங்கள் செல்வம்.

உங்களுடைய சேமிப்பை அதிகரிக்கக்கூடிய வழிகளில் வலிமையான வழியாக வருவாய் அதிகரிப்பு என்றுமே ஆகாது. உங்களுடைய தன்னடக்கத்தை அதிகரிப்பதன் மூலமே சேமிப்பின் அதிகரிப்பு சாத்தியப்படும்.

நீங்கள் சேமிக்க எந்த ஒரு சிறப்பு காரணமும் தேவையில்லை.

12. ஆச்சர்யம்.

வரலாறு நம் எதிர்பார்ப்புகளை அளவிட உதவுகிறது. மக்கள் எப்படியெல்லாம் தவறாக முடிவெடுக்கிறார்கள் என்பதை நமக்கு சொல்லித்தருகிறது ஓரளவிற்கு எது சரியாக இருக்கும் என்பதற்கான வழிகாட்டியாகவும் உள்ளது. ஆனால், அது எந்த வகையிலும் எதிர்காலத்தின் வரைபடம் ஆகாது.

இயற்கை , எந்த ஒன்றையும் , நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ தொடர்ந்து கால எல்லை இல்லாமல் இருக்க விடுவதில்லை.

13. தாப்பா தவறுகள்.

ஒவ்வொரு திட்டத்திலும் மிக முக்கியமான பகுதி, அத்திட்டம் , திட்டமிட்டபடி நடக்காமல் போவதை தடுக்க எப்படி திட்டமிடுவது என்பதே.

பாராட்டை முழுவதுமாக அடைய விரும்பினால், மிகக்குறைந்த அளவில் அதை எதிர்பாருங்கள்.

நாம் பத்தாவது அத்தியாதில் , மிகப்பெரும் செல்வந்தர்கள் குறைவாக மதிக்கப்படும் ஒரு யுக்தியை கண்டோம். சேமிக்க நமக்கு ஏதும் பெரிதாக காரணம் வேண்டியிருக்காது என்பதை நாம் உணர்தல் என்பதே அது. ஒரு காருக்காகவோ, இல்லை வாழும் இல்லத்துக்காகவோ நாம் சேமிப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் , அதே முறையில் , நாம் எதிர்கொள்ள வேண்டிய , அரிய இயலாத , திட்டமிடப்படாத இடங்களுக்கும் நாம் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை அந்த பீரங்கிகளை செயலிழக்க செய்த காட்டுஎலிகளை(ஜெர்மன் ராணுவம்) போன்ற பொருளாதார நிபந்தனைகளுக்காக அவசியமாகிறது.

14.நீங்களும் மாறுவீர்கள்

பொருளாதார திட்டங்களில் , இரு துருவங்களை, அதீத நிலைகளை, நீங்கள் தவிர்த்தான் ஆக வேண்டும். உங்களுடைய குறைந்த வருவையிலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலாம், அல்லது அதிக வருவாய் பெற அயராது உழைத்துக்கொண்டே இருக்கலாம். இவ்விரு வழிகளும் இறுதியில் அதிருப்தியைதான் தரும்.

15.எதுவும் இலவசம் இல்லை

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு; ஆயினும் எல்லா விலைகளும் பட்டியலில் வருவதில்லை.

எந்த ஒரு செயலும் எளிதக்தான் தோன்றும் அதை செய்வது நாமாக இல்லாத பட்சத்தில்.

16. நீங்களும் நானும்

உங்களுடை வழிமுறைகளிலிருந்து வேறுபட்ட முதலீடு செய்பவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை பெறும்போது கவனமாக இருங்கள்.

17.  மீதான ஈர்ப்பு.

18. எல்லாவற்றையும் நீங்கள் நம்பும்போது.

உங்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு தேவை என்னும் நிலை வரும்போது, நல்ல தீர்வு எது என்று தெரியாத பட்சத்தில் , அல்லது தீர்வுகளே இல்லாத பட்சத்தில் , ஏதோ ஒரு பாதையை நம்ப வேண்டியிருக்கிறது, எதைவாது நம்பவேண்டிய ஒரு நிலை. எதையாவது முயல்வது அல்ல ; எதையாவது நம்புவது.

எனக்கு என்ன தெரியுமோ அதன் அடிப்படையில் , உலகுக்கு என்னை தெரியப்படுத்தி கொள்ளும் நிலை ( ஒரு குழந்தையை போல)

வரலாறு என்பது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவுகள்.

கடந்த காலத்தை விவரிப்பதிலும், எதிர்காலத்தை கணிப்பதிலும், நாம் திறமையை மட்டுமே முக்கியமானதாக கொண்டு அதிர்ஷ்டத்தின் பங்கை மறந்து விடுகிறோம்.

நமக்கு என்ன தெரிகிறதோ அதில்தான் நாம் குறியாய் உள்ளோம். தெரியாதவைகளை புறக்கணிக்கிறோம்

இத்தகைய நிலை நம்மை அளவுக்கு அதிகமாக நம் நம்பிக்கையின் மீது சார்ந்திருக்க வைக்கிறது.





செல்வக்குமார்

பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊர்,தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பிறந்த ஊர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிழைக்கும் ஊர். தொழில் : கைபேசி பழுது நீக்குதல்.

Post a Comment

Previous Post Next Post

பணம்சார் உளவியல் The Psychology of Money (Tamil)